தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமானிகள் விடுப்பால் விமானம் ரத்து - 142 பயணிகள் அவதி - chennai flights

சென்னை டூ டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் திடீரென ரத்து ஆனதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

விமானிகள் விடுப்பால் விமானம் ரத்து! 142 பயணிகள் அவதி
விமானிகள் விடுப்பால் விமானம் ரத்து! 142 பயணிகள் அவதி

By

Published : Jun 18, 2023, 1:15 PM IST

சென்னை: சென்னை மற்றும் டெல்லி இடையே தினசரி இயங்கி வரும் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டதால் அதில் பயணம் செல்ல இருந்த 142 பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டதால் அதில் பயணிக்க வேண்டிய 142 பயணிகள் வேறு விமானங்களில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த திடீர் ரத்துக்கு காரணம், இந்த ஏர் இந்தியா விமானத்தை இயக்க இருந்த விமானிகள் முன்னதாக அறிவிக்காமல் திடீர் விடுப்பு எடுத்ததால் விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது எனக் கூறப்படுகிறது.

அதைப்போல், சென்னையில் இருந்து டெல்லிக்குச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானமும் டெல்லியில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு பகல் 12:40 மணிக்கு சென்னை வரவேண்டிய விமானமும் இன்று ரத்து ஆகியுள்ளது. இந்த விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள் திடீர் விடுப்பு எடுத்து விட்டதாகவும் அதற்கு மாற்று ஏற்பாடு செய்ய முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:பீகார் மாநிலம் கந்தக் ஆற்றில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்ட குட்டி முதலைகள்!

இந்நிலையில், விமானம் ரத்து குறித்து பயணிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டதாக ஏர் இந்தியா சார்பில் தெரிவித்துள்ளனர். ஆனாலும் பயணிகள் விமான நிலையத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, பயணிகள் தங்களுக்கு கடைசி நிமிடத்தில் தகவல் தெரிவித்ததாக குற்றம்சாட்டினர். சென்னை டூ டெல்லி செல்ல இருந்த 142 பயணிகள் முன்பதிவு செய்த நிலையில் உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளானார்கள். எனவே, பயணிகளை இண்டிகோ மற்றும் விஸ்தாரா ஆகிய வெவ்வேறு விமானங்களுக்கு மாற்றி அனுப்பி வைத்துள்ளனர்.

அதோடு இன்று காலை 10:05 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்குப் புறப்பட வேண்டிய ஏ ஐ 430 ஏர் இந்தியா விமானம் முன்னதாகவே காலை 9:30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் என்ற அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த விமானத்தையும் ரத்து செய்தது, ஏர் இந்தியா. ரத்து செய்யப்பட்ட விமானப் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஏர் இந்தியா விமானத்தில் அடிக்கடி இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும் நிலையில் விமானப் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு டெல்லிக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் மீண்டும் காலை 10 மணிக்கு டெல்லியில் புறப்பட்டு பகல் 12:40 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வரும். இன்றைய தினம் இங்கிருந்து போகும் விமானம் ரத்து காரணமாக டெல்லியில் இருந்து வரும் ஏ ஐ 429 ஏர் இந்தியா விமானமும் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:திருச்சி விமான நிலையத்தில் லேப்டாப் பேட்டரி மற்றும் ரூ.37 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details