தமிழ்நாடு

tamil nadu

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

By

Published : Jun 14, 2020, 1:00 PM IST

Published : Jun 14, 2020, 1:00 PM IST

Top 10 news @ 1 PM
Top 10 news @ 1 PM

பாகிஸ்தான் தாக்குதலில் மேலும் ஒரு ராணுவ வீரர் மரணம்!

ஸ்ரீநகர் : போர் நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் நேற்று இரவு மேற்கொண்ட திடீர் தாக்குதலில், ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார்.

உலகளவில் கரோனாவால் 78.55 லட்சம் பேர் பாதிப்பு, 4.31 லட்சம் பேர் உயிரிழப்பு

உலகளவில் இதுவரை 78 லட்சத்து 55 ஆயிரத்து 400 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்து 31 ஆயிரத்து 728ஆக உள்ளது.

அட்லான்டாவில் ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் சுட்டுக்கொலை: காவல் துறை தலைவர் ரிசைன்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் அட்லான்டா நகரில் ஆப்ரிக்க அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல் துறையினர் சுட்டுக்கொன்றதை அடுத்து அந்நகர காவல் துறை தலைவர் பதவி விலகியுள்ளார்.

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30,000 தாண்டியது

சென்னை: சென்னையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 30,000-த்தை கடந்தது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஆசிரியர்களின் கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை

ஈரோடு : தன்னிடம் முன் அனுமதி பெறாமல், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

'தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம்தான் ஆனால் வேலை வாய்ப்புகள் வழங்க முடியும்' : சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பேட்டி

தொலைக்காட்சித் தொடர்களின் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சுஜாதா விஜயகுமார் நமது ஈடிவி பாரத்துக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டி.

சீன ஆக்கிரமிப்பு: சீனாவுக்கு சென்ற பிரதமர்களின் பயணம் குறித்து நினைவுகூர்ந்த காங்.!

டெல்லி: சீனா லடாக் பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் படேல், சீனாவுக்கு இந்தியப் பிரதமர்கள் சென்ற பயணம் குறித்து நினைவுகூர்ந்துள்ளார்.

எண்ணெய் கிணறு தீ விபத்து: அசாம் விரைந்த அமெரிக்க வல்லுநர்கள்

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் எண்ணெய் கிணறு வெடித்த விபத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த வல்லுநர்கள் குழு ஆய்வு நடத்திவரும் நிலையில், அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த மூன்று வல்லுநர்கள் விபத்து குறித்து ஆய்வு செய்ய விரைந்துள்ளனர்.

அமெரிக்க ராணுவ தளத்தில் இரட்டை ஏவுகணைத் தாக்குதல்!

பாக்தாத் : ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே அமெரிக்கப் படையினர் முகாமிட்டுள்ள ராணுவ தளத்தை இரண்டு ஏவுகணைகள் தாக்கியுள்ளன.

லண்டனில் தொடரும் கறுப்பின மக்களின் உரிமைக்கான போராட்டம்!

லண்டன் : 2019ஆம் ஆண்டைக் காட்டிலும், 2020ஆம் ஆண்டில் கறுப்பின மக்கள் மீது காவலர்களால் நடத்தப்படும் தாக்குதல் அதிகரித்துள்ளன. காவல் துறையினரின் தாக்குதல்களில் உயிரிழந்த கறுப்பின மக்களின் எண்ணிக்கை 43 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details