தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TN School Reopen: தமிழ்நாட்டில் ஜூன் 12-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு! - minister anbil mahesh

கோடை வெயில் தாக்கத்தால் ஜூன் 1ம் தேதியில் இருந்து ஜூன் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 5, 2023, 12:08 PM IST

சென்னை:சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

கோடை விடுமுறை நிறைவடைந்து 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஜூன் 1 ஆம் தேதியும், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 5 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோடை வெயிலில் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நாளை மறு தினம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வெயிலின் தாக்கம் இதுவரையில் குறையவில்லை. நேற்று மதுரை, கடலூர், சென்னை, திருநெல்வேலி, வேலூர், கரூர், தூத்துக்குடி, நாகை, உள்ளிட்ட 18 நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.

இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் வெயிலின் தாக்கத்தால் 7-ஆம் தேதிக்கு பதிலாக 5 நாட்களுக்குப் பிறகு வரும் திங்கள்கிழமை ஜூன் 12-ஆம் தேதியோ அல்லது 15-ம் தேதியோ பள்ளிகளை திறக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது.

இதனிடையே, கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "கோடை வெயிலின் தாக்கல் அதிகமாக உள்ளதால் 1 முதல் 5-வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜுன் 12ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்" தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவித்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பள்ளி திறக்கப்படும் போது மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை வழங்க அந்தந்த பள்ளிகளுக்கு புத்தகங்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Arikomban Elephant: ஆட்டம் காட்டிய அரிக்கொம்பனை பிடித்த வனத்துறை.. கம்பத்தில் 144 தடை நீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details