தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9pm
9pm

By

Published : Jun 13, 2020, 8:55 PM IST

நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஊரடங்கு மீறல்: ரூ.12 கோடியைத் தாண்டிய அபராத வசூல்!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த 81 நாள்களில் 12 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரத்து 99 கோடி ரூபாய் அபாராதம் வசூலித்துள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கரோனாவுக்கு 30 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகவும், இன்று ஒரே நாளில் கரோனா வைரசுக்கு 30 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அவசர ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர்

கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

தபால் நிலையங்களிலும் இனி சானிடைசர் கிடைக்கும்...!

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள தபால் நிலையங்களில் சானிடைசரை விற்பனை செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

'பகல் நிலவு நான்தான்' - 'இரட்டை ரோஜா' ஷிவானியின் லேட்டஸ்ட் கிளிக்

வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கிறேன்

அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 'வொன்டர் வுமன் 1984'!

வொன்டர் வுமன் படத்தின் இரண்டாம் பாகம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளதாக அப்படத்தின் நாயகி கேல் கடோட் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள், வீரர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்: பிசிசிஐ

கிரிக்கெட் போட்டிகள் எப்போது மீண்டும் தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் வீரர்களின் பாதுகாப்பே தற்போது முக்கியம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

'நான் தயார்' மிஸ்பாவிடம் கூறிய வஹாப் ரியாஸ்...!

எனது தேவை அணிக்கு வேண்டுமென்றால் டெஸ்ட் போட்டிகளில் ஆடத் தயாராக இருப்பதாக பாக். வேகப்பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் பயிற்சியாளர் மிஸ்பாவிடம் தெரிவித்துள்ளார்.

'ஹாங்காங் மக்கள் சீன தேசிய கீதத்தை பாட வேண்டும்'- புதிய சட்டம் அமலுக்கு வந்தது!

ஹாங்காங்: சீன தேசிய கீதத்தை ஹாங்காங் மக்கள் பாட வேண்டும் என்ற புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தை மீறினால் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

ABOUT THE AUTHOR

...view details