தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களுக்கு குட் நியூஸ் - தங்கம் விலை குறைந்தது... எவ்வளவு தெரியுமா? - 22 carat gold rate in chennai

தாறுமாறாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளான இன்று எதிர்பாராத அளவிற்கு குறைந்துள்ளது. இன்றைய தங்கத்தின் விலை நிலவரத்தை காணலாம்.

gold rate sudden drop
இன்றைய தங்கம் விலை குறைந்தது

By

Published : Jul 24, 2023, 3:45 PM IST

சென்னை: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இன்று (ஜூலை 24) ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,360-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் தங்கம் ஒரு-கிராமுக்கு ரூ.5,545-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏறு முகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை 11ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.43,856க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருந்தது. ஜூலை 12ம் தேதி சவரன் ரூ.44,000-க்கும், ஜூலை 13ம் தேதி ரூ.44,296-ம், ஜூலை 14ம் தேதி ரூ.44,360-ம், ஜூலை 15ம் தேதி ரூ.44,400-ம் என்று தங்கம் விலை விற்பனையானது.

இதையும் படிங்க:ஊருக்குள் செல்ல மறுக்கும் அரசுப்பேருந்து ஓட்டுநர்கள்... காரணம் என்ன?

பொதுவாக ஆடி மாதம் என்பதால் எந்த ஒரு விஷேச நிகழ்வுகளும் இருக்காத காரணத்தால் தங்கம் விலை சற்று குறைந்து காணப்படும். ஆனால் அதற்கு மாறாக இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக ஆடி மாதம் தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டது. இந்த விலை ஏற்றத்தால் தங்கம் வாங்குபவர்களிடம் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

மேலும், ஜூலை 21-ம் தேதி தங்கம் விலை திடீரென சரிவை சந்தித்தது. ரூ.320 குறைந்து ஜூலை 22ஆம் தேதி ரூ.120 குறைந்தது. வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலையில் எந்த மாற்றம் இல்லாமல் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44,400க்கே விற்பனை செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து இன்று (ஜூலை24) தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.

இன்று(ஜூலை 24) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,360-க்கும் அதை போல் ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,545-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராம் ரூ.80.50க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.80,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறன.

மேலும் 24-கேரட் சுத்த தங்கம் பவுனுக்கு ரூ.48,096க்கும் 24-கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,012க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தங்கம் வாங்கும் மக்களிடைய சிறிது ஆறுதல் அளித்துள்ளது.

இதையும் படிங்க:Tiruvannamalai: உலக நன்மைக்காக பரதநாட்டியம் ஆடிய படியே கிரிவலம் வந்த பெண்!

ABOUT THE AUTHOR

...view details