ஒரேநாளில் 3,479 பேருக்கு கரோனா உறுதி - தமிழ்நாட்டில் கரோனா
தமிழ்நாட்டில் ஒரேநாளில் 3 ஆயிரத்து 479 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா
By
Published : Jul 6, 2021, 8:58 PM IST
சென்னை: ஒவ்வொரு நாளும் மாவட்டவாரியாக கரோனா பாதித்தவர்கள் விவரத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை.6) வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 105 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்த 3,476 பேருக்கும், மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த இருவருக்கும், ஆந்திராவிலிருந்து வந்த ஒருவருக்கும் என 3,479 பேருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மூன்று கோடியே 29 லட்சத்து 39 ஆயிரத்து 167 பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரோனா உயிரிழப்பு
இதனால் மாநிலத்தில் 25 லட்சத்து 3 ஆயிரத்து 481 பேர் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 34 ஆயிரத்து 477 பேர் மருத்துவம் பெற்றுவருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் 3 ஆயிரத்து 855 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 35 ஆயிரத்து 872 என அதிகரித்துள்ளது.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் தனியார் மருத்துவமனையில் 18 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 55 நோயாளிகளும் என 73 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்து 132 என அதிகரித்துள்ளது.