சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலராக பணியாற்றியபோது பொன். மாணிக்கவேல், தவறான அறிக்கைகளைத் தாக்கல் செய்தது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த சேகாரம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதில் தன்னைச் செய்தியாளர் என்று சேகாரம் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, அவரது அடையாள அட்டை குறித்து கேள்வி எழுப்பி, உண்மையான செய்தியாளர்கள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாட்டில் எத்தனைச் செய்தியாளர் சங்கங்கள் உள்ளன என, அரசுதரப்பு வழக்கறிஞரை நோக்கி நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இவர்கள் சென்னை செய்தியாளர்கள் மன்றத்தில் ஆதிக்கத்தைச் செலுத்தி உண்மையான செய்தியாளர்களை நுழைய அனுமதிப்பதில்லை என்றும் நீதிபதிகள், செய்தியாளர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் மிரட்டி பணம் சம்பாதிக்கின்றனர் எனவும் தெரிவித்தனர்.