தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'முதலமைச்சருக்கு அளிக்கும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கு அளிக்க வேண்டும்'

நீதிபதியைப் பணிசெய்ய விடாமல் 25 நிமிடம் தடுத்துவைத்த காவல் துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம், முதலமைச்சர், அமைச்சர்களுக்கு அளிக்கும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

judge
judge

By

Published : Oct 1, 2021, 7:15 PM IST

சென்னை: சிவாஜி கணேசனின் 96ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை அடையாறு டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இதற்காகச் சாலைகளில் இரும்புத் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை நிறுத்திவைத்தனர். இதனால் அந்தச் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலையில் பணிக்குச் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இதைப் போன்று அந்தச் சாலை வழியாக உயர் நீதிமன்றம் வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வாகனத்தையும் காவல் துறையினர் தடுத்துள்ளனர். இதனால் உயர் நீதிமன்றத்திற்கு 25 நிமிடம் தாமதமாக வந்ததால் அவரது பணி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து உள் துறைச் செயலர் முன்னிலையாகி விளக்கம் அளிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

அதன்படி காணொலி காட்சி மூலம் முன்னிலையான உள் துறைச் செயலர் பிரபாகரிடம் எதனடிப்படையில் 25 நிமிடங்கள் தடுத்து நிறுத்தினீர்கள்? பொது ஊழியரான நீதிபதியான என்னைப் பணிசெய்ய விடாமல் தடுத்தது நீதிமன்ற அவமதிப்பு என நீதிபதி சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

நடைபெற்ற நிகழ்விற்கு வருத்தம் தெரிவித்த உள் துறைச் செயலர் சென்னை மாநகர காவல் ஆணையரை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாது என உறுதியளித்தார்.

இதையடுத்து, முதலமைச்சர், அமைச்சர்கள் நிகழ்ச்சிக்குப் போகும்போது இதுபோல் காவல் துறையினர் தடுத்து நிறுத்துவார்களா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, முதலமைச்சர், அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த நிகழ்வு நீதிமன்ற அவமதிப்பாக இருந்தாலும் எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காது என்று நம்புவதாக நினைத்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தகுதி இருந்தும் பதவி உயர்வு இல்லை - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்

ABOUT THE AUTHOR

...view details