கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று நோய் பரவல் மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் கடுமையான வீழ்ச்சியை மத்திய, மாநில அரசுகள் சரிசெய்ய முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தனது ஒருமாத ஊதியத்தை, அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனுக்காக அளிக்க முன்வந்துள்ளார். இதையடுத்து, தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்து, 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.