தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’நீட் வேண்டாம் என்பதே பெரும்பாலானோர் கருத்து’ - நீதிபதி ஏ.கே.ராஜன் தகவல் - judge a k rajan

ஆணையத்திற்கு வந்துள்ள 25 ஆயிரம் கடிதங்களில், நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது என உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

judge-a-k-rajan-says-most-people-say-no-to-need
நீட் வேண்டாம் என்பதே பெரும்பாலானோர் கருத்து - ஏ.கே. ராஜன் தகவல்

By

Published : Jun 21, 2021, 7:20 PM IST

Updated : Jun 21, 2021, 9:57 PM IST

சென்னை:நீட் தேர்வினால் தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவின் கூட்டம், இன்று (ஜூன்.21) நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆணையத்தின் தலைவர் ஏ.கே.ராஜன், "ஆணையத்திற்கு 25 ஆயிரம் மனுக்கள் தற்போது வரை வந்துள்ளது. 23ஆம் தேதி வரை மக்கள் தங்களது கருத்துகளை அனுப்பலாம். இதற்கு மேலும் காலநீட்டிப்பு வழங்கப்படாது.

நீட் வேண்டாம் என்பதே பெரும்பாலானோர் கருத்து - ஏ.கே. ராஜன் தகவல்

மனு அளித்துள்ளவர்களில் பெரும்பாலானோர் நீட் தேர்வு வேண்டாம் என்றே கருத்தையே தெரிவித்துள்ளனர். அரசு கூறியுள்ள அடிப்படையில் எங்கள் கருத்துகளை குறிப்பிட்ட நாள்களுக்குள் அளித்து விடுவோம். ஆணையத்திற்கு கால நீட்டிப்பு கேட்கும் எண்ணம் இல்லை" என்றார்.

இதையும் படிங்க:நல்லாட்சிக்கு வழி காணும் ஆளுநர் உரை - வைகோ பாராட்டு

Last Updated : Jun 21, 2021, 9:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details