தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோலிவுட்டில் இயக்குநர் அவதாரம் எடுத்த மற்றொரு தயாரிப்பாளர்! - தயாரிப்பாளரான ஜேஎஸ்கே

Tamil Cinema Update: தமிழ் சினிமாவில் படம் விநியோகஸ்தராக தடம் பதித்த ஜேஎஸ்கே, பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து தற்போது 'ஃபயர்' என்ற திரைப்படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார்.

ஃபயர் என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே
ஃபயர் என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 3:42 PM IST

சென்னை:தமிழில் பன்மொழி வெற்றிப் படங்களின் விநியோகஸ்தரான ஜேஎஸ்கே, தேசிய விருது வென்ற 'தங்க மீன்கள்' மற்றும் 'குற்றம் கடிதல்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்', 'மதயானைக் கூட்டம்', 'தரமணி', 'புரியாத புதிர்' மற்றும் விரைவில் வெளியாக உள்ள 'அண்டாவ காணோம்' போன்ற படங்களை தயாரித்து உள்ளார். நடிகராகவும் முத்திரை பதித்து வரும் இவர், தற்போது இயக்குநராக மாறியுள்ளார்.

பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் திரில்லர் படமான 'ஃபயர்' என்ற படத்தையும் இயக்கியுள்ளார். சினிமா உலகில் பல்வேறு வெற்றி படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, நடிகராகவும் முத்திரை பதித்து வரும் ஜேஎஸ்கே தற்போது இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் எழுதி இயக்கும் திரைப்படத்திற்கு 'ஃபயர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால் மற்றும் காயத்ரி ஷான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப்படம், தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவாகும் விறுவிறுப்பான திரில்லர் படமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பெண்களின் விழிப்புணர்வு குறித்து பேசும் 'ஃபயர்' திரைப்படம் குறித்து இயக்குநராக அவதரிக்கும் ஜேஎஸ்கே கூறுகையில், "இன்றைய காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்தும் அவர்கள் எவ்வாறு அவற்றை கடந்து வருவது என்பது குறித்தும் மாறுபட்ட கோணத்தில் இப்படம் திரையிடப்படும். தொடர்ந்து தவறான செயல்களில் தெரிந்தே ஈடுபடும் ஆண்கள் இந்த சமுதாயத்தில் சகஜமாக நடமாடும் நிலையில், பெண்கள் தெரியாமல் தவறு செய்தாலும் அவர்களை நமது சமூகம் வேறு மாதிரி பார்க்கிறது.

இந்த சமூக பார்வை மாறினால் மட்டுமே நல்ல சமுதாயம் உருவாகும். ஏனென்றால் இவ்வாறு இருப்பது இந்த தலைமுறைக்கு மட்டுமல்ல, அடுத்த தலைமுறைக்கும் நல்லதல்ல என்னும் கருத்தையும் ரசிகர்களுக்கு இப்படம் கொண்டு செல்லும். மேற்கண்ட விஷயங்களை சிறிதும் சுவாரஸ்யம் குறையாமலும், அதே சமயம் சமுதாய விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் ஃபயர் எடுத்துரைக்கும். இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான திரைப்படமாக இது இருக்கும்" ஜேஎஸ்கே கூறினார்.

தனது ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் பேனரில் தயாராகும் 'ஃபயர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார். இப்படத்திற்கு டி.கே அறிமுக இசைக்கலைஞர் இசையமைக்கிறார். இதைத்தொடர்ந்து இந்தப் படத்திற்கு சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.கே.ஜீவா வசனங்களை எழுதியுள்ளார். இப்படத்தின் பாடல் வரிகளை மதுர கவியும், ராவும் எழுதுகின்றனர். இதைத் தொடர்ந்து, சி.எஸ்.பிரேம் குமார் படத்தொகுப்பும், சுரேஷ் கல்லேரி கலை இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:உலக வசூல் சாதனையில் ஜவானை பின்னுக்குத் தள்ளிய லியோ!

ABOUT THE AUTHOR

...view details