சென்னை: 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. பாஜக அதன் கூட்டணியை வலுப்படுத்தும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதற்காக டெல்லியில் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி அதன் கூட்டணியின் பலத்தைக் காட்டியது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அடுத்த கட்ட ஆலோசனைக் கூட்டம் எப்போது என்பது குறித்து தகவல் இல்லை. இந்நிலையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுகவின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தங்களது கூட்டணியில் பாஜக இல்லை என வெளிப்படையாக அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
தமிழகம் போலவே புதுச்சேரியிலும் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் சுமுகமான உறவு இல்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக இல்லாமல் பாஜக வளரமுடியாது எனக் கூறிய அதிமுகவின் முக்கிய தலைவர்கள் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவரைச் சந்தித்து எடுத்துக்கூறியதோடு, மாநிலத் தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என வலிறுத்தியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இன்று புதுச்சேரி மாநில பாஜக தலைவராக இருந்த சாமிநாதன் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாகச் செல்வகணபதி நியமிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து பாஜகவின் தேசிய செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "செல்வகணபதி எம்பி புதுச்சேரியின் மாநில பாஜக தலைவராக நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "பா.ஜ.க வை தன் தோளில் இருந்து இறக்கும் தைரியமும், தெம்பும் அ.தி.மு.க.விற்கு இல்லை" - ஜவாஹிருல்லா!