தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல், ஆர்.எஸ். பாரதியின் இழிவான பேச்சு: எழுந்தது கண்டனம் - On behalf of the Journalists Association, protesting

சென்னை: டெல்லியில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது, ஆர்.எஸ். பாரதி ஊடகங்கள் குறித்து இழிவாகப் பேசியது உள்ளிட்டவற்றை கண்டித்து தாம்பரத்தில் அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

journalists-protest-in-delhi
journalists-protest-in-delhi

By

Published : Mar 1, 2020, 7:50 AM IST

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியபோது ஏற்பட்ட கலவரத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது கொடூரமான முறையில் கலவரக்காரர்கள் தாக்குதலை அரங்கேற்றியதில் மூன்று செய்தியாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதனைக் கண்டித்து தாம்பரத்தில் அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிடவும், டெல்லி காவல் துறையைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மேலும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஊடகங்கள் குறித்து இழிவாகப் பேசியதைக் கண்டித்து, அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு அனைத்து காவல் நிலையங்களிலும் ஆர்.எஸ். பாரதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: சிஏஏ எதிர்ப்பு: மோடி, ஷா உருவப்படத்தை கிழித்தெறிந்த மாணவர்கள்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details