தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கைது.. வலுத்த எதிர்ப்பு.. வேகமாக விடுவித்த காவல்துறை

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் அவரது கடிதம் குறித்து பொய் செய்தி வெளியிட்டதாக பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை சைபர்கிரைம் காவல் துறையினர் கைது செய்து, பின் மாலை நேரத்தில் விடுவித்தனர்.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கு : பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் கைது
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கு : பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் கைது

By

Published : Sep 11, 2022, 6:05 PM IST

சென்னை: ’அறம்’ இணைய தளம் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான சாவித்திரி கண்ணன் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தார். வழக்கு நடைபெற்று வரும் வேளையில் மாணவி எழுதிய கடிதத்தில் உள்ள கையெழுத்து அவருடையது இல்லை என்பதைத் தடயவியல் துறையினர் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியிருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

கனியாமூர் தனியார் பள்ளியில் நடந்த கலவர வழக்கை விசாரித்து வரும் சிறப்பு அதிரடிப்படை காவல் துறையினர் பல்வேறு நபர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று(செப்.11) சென்னையில் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை திண்டிவனம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இச்செய்தி, வெகுவிரைவில் பல்வேறு ஊடகங்களில் பரவியது. இதற்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சி, மற்றும் பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன.

இதைத்தொடர்ந்து சாவித்திரி கண்ணன் விடுவிக்கப்பட்டார். ஒரு மூத்த பத்திரிகையாளர் திடீரென கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட சம்பவம் பலரிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பாரதியாருக்கு மரியாதை செலுத்திய ஆளுநர்

ABOUT THE AUTHOR

...view details