சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் மூத்த பத்திரிகையாளரான அன்பழகனின் மக்கள் செய்தி மையம் பதிப்பகத்தின் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அந்த அரங்கில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில்அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து எழுதப்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன.
நேற்றைய தினம் மக்கள் செய்தி மையம் அரங்கை மூடச் சொல்லி புத்தகக் காட்சியை நடத்தும் பபாசி அமைப்பினர் அன்பழகனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். அதற்கு அவர் அரங்கை மூடுவதற்கான காரணத்தை எழுத்துப் பூர்வமாகக் கேட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் அன்பழகன் கொலை மிரட்டல் விடுத்ததாக பபாசி நிர்வாகிகள் சென்னை மாநகரக் காவல் துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தனர்.