அண்ணாநகர் முதல் தெருவில் கார்த்திகா என்பவர் பியூட்டி பார்லரில் பணிபுரிகிறார். இவர் காலை 11 மணியளவில் பியூட்டி பார்லர் திறந்து இரவு 8 மணிக்கு பூட்டிவிடுவார். நேற்று இரவு வழக்கம்போல் பியூட்டி பார்லர் மூடும்போது இரண்டு இளைஞர்கள் வந்து எவ்வளவு நேரம் கடை திறந்திருக்கும் என கேட்டறிந்து சென்றுள்ளனர்.
கத்தி முனையில் இளம்பெண்ணிடம் நகைபறிப்பு; 4 பேர் கைது! - police
சென்னை: பியூட்டி பார்லரில் புகுந்து பெண் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகைபறித்தது தொடர்பாக நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சிறிது நேரத்தில் நான்கு நபர்கள் மேலே வந்து மசாஜ் செய்ய வேண்டும் என்று கேட்டு அங்கிருந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கழுத்தில் கத்தியை வைத்து நான்கு சவரன் தங்க சங்கிலியை பறித்ததோடு மட்டுமல்லாது அவரை தாக்கினர்.
அப்போது வலி தாங்கமுடியாமல் அந்தப் பெண் கூச்சலிட்டதால் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.