தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமூக விரோத செயல்களை தடுக்க இணை ஆணையர் புதிய திட்டம்! - சென்னை செய்திகள்

சென்னை: புதுவண்ணாரப்பேட்டை பகுதிக்குட்பட்ட சுனாமி குடியிருப்பில் வசிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கு காவல்துறை இணை ஆணையர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

joint-commissioners-new-plan-to-prevent-anti-social-activities
joint-commissioners-new-plan-to-prevent-anti-social-activities

By

Published : Dec 14, 2020, 10:21 PM IST

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் சமூக விரோத செயல்கள் அடிக்கடி நிகழ்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்படி குடியிருப்பு பகுதியில் அதிக கவனம் செலுத்த உத்தரவிட்டிருந்த நிலையில் வடக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுடன் கலந்துரையாடினார்.

இன்று (டிசம்பர் 14) சுனாமி குடியிருப்பு பகுதியில் வாழும் ஏழை எளிய மாணவர்களுக்கு மைதானம் ஒதுக்கி, விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். மேலும் அப்பகுதி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

சமூக விரோத செயல்களை தடுக்கும் விதமாக இளைஞர்களையும், மாணவர்களையும் நல்வழிப்படுத்துவதற்காக இணை ஆணையர் கொண்டு வந்துள்ள இந்த திட்டம் குடியிருப்பு வாசிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details