பொதுத் துறை வங்கிகளில் முதன்மையான வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள எட்டாயிரம் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்பிஐ வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை : ஜூனியர் அசோசியேட்
பணியிடங்கள் : 8000 (தமிழ்நாட்டிற்கு 393 இடங்கள் ஒதுக்கீடு)
தகுதி : 01.01.2020 தேதியின்படி ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 01.01.2020 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு உள்ள பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.