தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வட இந்தியர்களுக்கே வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்பது பெரிய குற்றச்சாட்டாக நிலவிவருகிறது. இதனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தொடர் போராட்டங்களை நடத்திவந்தன.
மேலும், 'தமிழக வேலை தமிழருக்கு' என்கிற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன்பாக டிரெண்டிங்கும் ஆனது. இந்நிலையில் சென்னையில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான ஐ.சி.எஃப். ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
அதில் ரயில்வே நிர்வாகம் சார்பில் சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்பரண்டிஸ்களை சேர்ப்பது தொடர்பான அறிவிப்பு மே 20ஆம் தேதி வெளியானது. இந்த அறிவிப்பில் பல்வேறு பிரிவுகளில் 510 அப்ரெண்டிஸ் பணிக்கான இடங்கள் உள்ளதாகவும், அதில் தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீங்க வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செஞ்சிருக்கீங்களா! உடனே இத பண்ணுங்க - TN Employess
சென்னை: ஐ.சி.எஃப்.இல் தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோருக்கு மட்டும் தொழில் பழகுநர் பணி (அப்பரண்டிஸ்)-க்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
tnpsc
ஐ.சி.எஃப்.இன் நிறுவனத்தின் இந்த அறிவிப்பின் மூலம் மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முதல் படியாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.