தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலைவாய்ப்பு: எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் பணி! - இன்றைய வேலைவாய்ப்பு

சென்னை: எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர் பணியை நிரப்பிட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் பணி

By

Published : Nov 10, 2019, 4:19 PM IST

ரிஷிகேஷில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் நிரப்பப்படவுள்ள 372 செவிலியர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணி: Nursing Officer (Staff Nurse Grade -II)

காலியிடங்கள்: 372

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: B.sc (Hons), B.sc. Nursing, B.sc (Post-Certification), Post Basic B.Sc Nursing பட்டப்படிப்பை முடித்து Nurses மற்றும் Midwife in State, India Nursing Council-ல் பதிவு செய்திருக்க வேண்டும். அல்லது அதே துறையில் டிப்ளமோ முடித்து பதிவு செய்து 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழில் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.3000, ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,500, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையைான விவரங்கள் அறிய 👉 https://tinyurl.com/wwlveh3

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.12.2019

இதையும் படிங்க : வேலைவாய்ப்பு: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 380 காலிப்பணியிடங்கள்!

ABOUT THE AUTHOR

...view details