தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி - வாட்ஸ் அப் அட்மினின் ஜாமீன் மனு தள்ளுபடி!

நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி 18 லட்சம் ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக பதிவான வழக்கில் நீதித்துறை என்ற வாட்ஸ் அப் குழுவின் அட்மினின் ஜாமீன் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பன
நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பன

By

Published : Jun 9, 2022, 10:20 AM IST

சென்னை, உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாகப் பல்வேறு நபர்களிடம் பல லட்சம் பணம் பெற்றும், அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலக நிர்வாகி என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்ட நாகேந்திர குமார், குமார், மணிகண்டன் உள்பட ஏழு பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இவர்களில், மணிகண்டன் என்பவர் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிசிஐடி டி.எஸ்.பி. யின் ஆட்சேபனை மனுவை மாநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் தாக்கல் செய்தார். அதில், நீதித்துறை என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு உருவாக்கி, அதன்மூலம் உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக, ஒரு நபருக்கு 6 லட்சம் ரூபாய் என, 9 பேரிடம் போலி நியமன கடிதங்களை கொடுத்து 18 லட்ச ரூபாய்க்கு மோசடி செய்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மணிகண்டன் வசூலித்த தொகையை ராஜேந்திரகுமார் என்பவரிடம் கொடுத்துள்ளதாகவும், மனுதாரரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து மோசடி செய்த பணத்தை வசூலிக்க வேண்டியது அவசியம் உள்ளதால் ஜாமீன் வழங்ககக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆட்சேபனையை ஏற்ற நீதிபதி, ஜாமீன் கோரிய மணிகண்டனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த கொடூரச் சம்பவம் - தீவிர விசாரணையில் அலுவலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details