தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - வேலைவாய்ப்பு

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India Limited) நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

By

Published : Sep 18, 2022, 1:55 PM IST

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள Pharmacist மற்றும் Paramedical Laboratory Technician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்கள்:

Pharmacist – 4

Paramedical Laboratory Technician – 2

Pharmacist வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்கும் இறுதிநாளின் படி, குறைந்தபட்ச வயது 18ஆகவும் அதிகபட்ச வயது பொதுப்பிரிவினருக்கு 40, OBC - NCL 43-க்குள்ளும் இருக்க வேண்டும்.

Paramedical Laboratory Technician வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்கும் இறுதிநாளின் படி, குறைந்தபட்ச வயது 18ம் அதிகபட்சம் பொதுப்பிரிவினருக்கு 40, SC பிரிவினருக்கு 45க்குள்ளும் இருக்க வேண்டும்.

Pharmacist கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிலையத்தில் அறிவியல் பாடத்தில் 10, +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்திய அரசு மற்றும் இந்திய பார்மசி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் 2 வருட டிப்ளமோ பார்மசி படிப்பை முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மருந்தாளுநராகப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Paramedical Laboratory Technician கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிலையத்தில் அறிவியல் பாடத்தில் 10, +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம்/மருத்துவக் கல்லூரியில் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பத்தில் இளங்கலை [MLT (3 வருட படிப்பு)] தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தகுதியுடன் தொடர்புடைய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Pharmacist – ரூ.19,500

Paramedical Laboratory Technician – ரூ.16,640

தேர்வு முறை:

மேற்கண்ட இப்பணிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் https://www.oil-india.com/Document/Career/Advertisement%20Medical-Pharmacist_Paramedical.pdf என்ற வலைப்பக்கத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, 23/09/202 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க:வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details