தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களுக்குப் பணி - உயர் கல்வித்துறை அறிவிப்பு - உயர் கல்வித்துறை

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்காலிகமாக பணியாற்ற கௌரவ விரிவுரையாளர்களைப் பணி அமர்த்திக்கொள்ளலாம் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கல்லூரி
கல்லூரி

By

Published : Oct 2, 2021, 1:41 AM IST

தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்குத் தொகுப்பூதிய அடிப்படையில், கௌரவ விரிவுரையாளர்கள் மாணவர்களின் கல்வி நலன் கருதி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதேபோல் நடப்பு கல்வியாண்டில் காலியாகவுள்ளப் பணியிடங்களில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்வதற்கு உயர் கல்வித் துறைச் செயலாளர் கார்த்திகேயன் அனுமதி வழங்கியுள்ளார்.

நடப்பு கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரி ஆகியவற்றில் முதல் ஷிப்டில் தற்காலிகமாக பணியாற்ற 2ஆயிரத்து 423 கௌரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் கல்லூரிகள் நியமித்துக்கொள்ளலாம்.

மாதம் 20ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் 11 மாதங்களுக்கு வழங்கப்படும். ஏற்கனவே இரண்டாம் ஷிப்டில் பணியாற்ற ஆயிரத்து 661 கௌரவ விரிவுரையாளர்களுக்கு உயர்கல்வித்துறை அனுமதி வழங்கிய நிலையில், கூடுதலாக 2ஆயிரத்து 423 கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details