தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சவுதி அரேபியாவில் மருத்துவர் வேலை; தமிழ்நாடு அரசு தகவல்! - வேலைவாய்ப்பு

சென்னை: சவுதி அரேபியாவில் பணிபுரிய விருப்பமுள்ள மருத்துவர்கள், விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் மருத்துவர் வேலை

By

Published : Aug 2, 2019, 11:45 PM IST

சவுதி அரேபியாவில் பணிபுரிய விருப்பமுள்ள மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

  • சவுதி அரேபியா அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய இரண்டு வருட பணி அனுபவம் கொண்ட மருத்துவர்களுக்கு (கன்சல்டன்ட், சிறப்பு மருத்துவர்கள்) நேர்முகத் தேர்வு நடக்க உள்ளது. 55 வயதுக்கு உட்பட்டவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
  • தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சம்பளம் சவுதி அரசால் நிர்ணயிக்கப்படும். இது தவிர இலவச விமான டிக்கெட், உணவு, இருப்பிடம், குடும்ப விசா, மருத்துவ சலுகை, 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு ஆகியவை சட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்படும்.
  • தகுதியுள்ள மருத்துவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி தகுதி, அனுபவம், பாஸ்போர்ட், ஆதார் நகல் மற்றும் வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ovemcldr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 26, 27 ஆகிய தேதியில் கொச்சியிலும், 29, 30 ஆகிய தேதியில் டெல்லியிலும், செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் மும்பையிலும் நடக்கும்.
  • மேலும் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைத்தளம் மூலமாகவும், 044-22505886 / 22502267 / 8220634389 / 9566239685 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details