தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் கூடுதல் அலைக்கற்றையை செயல்படுத்தும் ஜியோ: அதிகரிக்க உள்ள இணைய வேகம்! - jio

சென்னை: தமிழ்நாட்டில் கூடுதலாக 850MHz, 5 MHz, 1800MHz, 5MHz, 2300 MHz, 10 MHz என்ற பேண்டுகளில் அலைக்கற்றைகளை ஜியோ நிறுவனம் ஏலத்தில் வாங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் கூடுதல் அலைக்கற்றை செயல்படுத்தும் ஜியோ
தமிழ்நாட்டில் கூடுதல் அலைக்கற்றைசெயல்படுத்தும் ஜியோ

By

Published : May 26, 2021, 8:58 PM IST

இந்திய அரசின் தொலைத்தொடர்பு துறையால் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்ட அலைக்கற்றை ஏலத்தில், இந்தியாவிலுள்ள அனைத்து 22 வட்டங்களிலும் அலைக்கற்றையைப் பயன்படுத்துவதற்கான உரிமையை வெற்றிகரமாகப் பெற்றிருப்பதாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முன்னதாஜ அறிவித்திருந்தது. இந்நிறுவனம், 850MHZ, 1800MHZ, 2300MHZ பேண்டுகளில் அலைக்கற்றைகளை பெற்றிருந்தது.

தற்போது தமிழ்நாட்டில் கூடுதலாக, 850MHz, 5 MHz, 1800MHz, 5MHz, 2300 MHz, 10 MHz பேண்டுகளில் அலைக்கற்றைகளை ஜியோ நிறுவனம் ஏலத்தில் வாங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள 22,000 தொலைத்தொடர்பு அமைவிடங்கள் அனைத்திலும் மேற்குறிப்பிடப்பட்ட மூன்று அலைக்கற்றைகளிலும் கூடுதலாக பெறப்பட்டிருக்கும் அலைக்கற்றைகளின் பயன்பாட்டு நடவடிக்கையை ஜியோ நிறுவனம் தொடங்கியிருக்கிறது.

இதன்மூலம் 850 MHz, 1800 MHz & 2300 MHzகளில் பயன்பாட்டிற்கு கிடைக்கக்கூடிய மொத்த அலைக்கற்றை அகலம் 50 விழுக்காடு அளவுக்கு முன்னேற்றம் பெறும் எனத் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கூடுதல் அலைக்கற்றைச் செயல்படுத்தும் ஜியோ
இந்த அலைக்கற்றை அளவு அதிகரிப்பு, மாநிலத்தில் ஒட்டுமொத்த ஜியோ சந்தாதாரர்களுக்கும் தொலைத்தொடர்புச் சேவை அனுபவத்தை மேம்படுத்த உதவும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் இணைய வேகம் அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளது. தற்போதுள்ள பெருந்தொற்று சூழலில் பொதுமுடக்கத்தால், வீட்டிலிருந்து பணியாற்றும் பணியாளர்களுக்கும், ஆன்லைனில் மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்கவும், வீட்டிலிருந்தே தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கும் இது உதவும் எனவும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details