சென்னை:பெரவள்ளூர் சந்திரசேகரன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் நல்லம நாயுடு (83). இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும், இளங்கோ, சரவணன், செல்வி, கனிமொழி என நான்கு பிள்ளைகளும் இருக்கின்றனர்.
இவர், வயது மூப்பு காரணமாக நேற்றிரவு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனே அவரை உறவினர்கள் சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் நல்லம நாயுடு காலமானதாக (Nallamma Naidu passed away) அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.