சென்னை: தனியார் தொலைக்காட்சியின் நிறுவனரான ஐசக் லிவிங்ஸ்டன் (51), கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 28ஆம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.
நிகழ்ச்சி முடிந்ததும் வீடு திரும்பிய இவர், வீட்டின் அலமாரியை திறந்து பார்த்தபோது, சுமார் 50 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இத்துடன் வீட்டில் வைத்திருந்த ரூ.7 ஆயிரம் ரொக்கப் பணமும் காணாமல் போயுள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஐசக் லிவிங்ஸ்டன் மற்றும் குடும்பத்தார், தங்களின் வீட்டில் கடந்த ஐந்து வருடமாக வீட்டு வேலை செய்துவரும் கனிமொழி என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக, கொடுங்கையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.