தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் படி இன்று (மே 6) முதல் மே 20ஆம் தேதி வரை அத்தியாவசிய பொருட்களின் கடைகள் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் அணைத்தும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய நகைக்கடை: சீல் வைத்த அலுவலர்கள் - ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய நகைக்கடை
சென்னை: புதுவண்ணாரப்பேட்டையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி திறந்த நகைக்கடைக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.
seal
இந்நிலையில், சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அரசின் கட்டுப்பாடுகளை மீறி நகைக்கடை ஒன்று திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, அங்கு சென்ற காவல் ஆய்வாளர் சரவணன், இளநிலை பொறியாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கடை திறந்திருப்பதை உறுதி செய்தனர். பின்னர் நகைக்கடைக்கு அவர்கள் சீல் வைத்தனர்.