தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓடும் பேருந்தில் பிளேடால் பையை அறுத்து 11 சவரன் நகை கொள்ளை! - சென்னையில் பிளேடால் பையை அறுத்து 11 சவரன் நகை கொள்ளை

சென்னை: பேருந்தில் பயணம் செய்தவரின் கைப்பையை அறுத்து அதிலிருந்த 11 சவரன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்ற ஆசாமியை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

பிளேடால் பையை அறுத்து 11 சவரன் நகை கொள்ளை
பிளேடால் பையை அறுத்து 11 சவரன் நகை கொள்ளை

By

Published : Mar 1, 2020, 3:38 PM IST

சென்னை மந்தைவெளி தேவநாதன் தெருவைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி(70). இவர் ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர். இவர் பணி நிமித்தமாக தி.நகரில் இருந்து ஸ்பென்சர் பிளாசாவிற்கு 11ஏ பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார்.

அப்போது ஸ்பென்சர் பிளாசா பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தான் கொண்டு வந்த கைப்பையை பார்க்கும்போது, அதிலிருந்த 11 சவரன் நகை காணாமல் போயுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், கைப்பை பிளேடால் அறுக்கப்பட்டு திருடியிருப்பதைக் கண்ட உடனே ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நாகையில் திரைப்பட பாணியில் நகைகள் கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details