சென்னை, தாம்பரம் அடுத்த கௌரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(38). இவர், வேளச்சேரி பிராதன சாலையில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருபவர் பிரகாஷ்(40). இவரது கடையில் 18 சவரன் தங்க நகைகளை வெங்கடேசன் அடமானம் வைத்துள்ளார். மேலும், சிட்பண்ட் மூலம் இரண்டு லட்ச ரூபாய் பணத்தையும் செலுத்தியுள்ளார்.
இதையடுத்து வெகு நாள்களாக செலுத்தப்பட்ட பணத்திற்கு நகை வழங்காததால் தான் கட்டிய பணத்தை பிரகாஷிடம் கேட்டதையடுத்து இரண்டு லட்ச ரூபாய்க்கான போலி காசோலையை வழங்கியுள்ளார். மேலும், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஒரு மாத காலமாக நகைக்கடை மூடப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்த வெங்கடேசன், அக்கம் பக்கத்தினரை விசாரித்த போது நகை மற்றும் பணத்துடன் உரிமையாளர் பிரகாஷ் குடும்பத்தினருடன் தலைமறையாகி விட்டது தெரியவந்தது.