தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் -  அமைச்சர் ஐ.பெரியசாமி - வடகிழக்கு பருவ மழை

5 சவரனுக்கு உட்பட்டு கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்ற சுமார் 1 லட்சம் பேர் உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் அவர்களுக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

நகை கடன் பெற்றவர்கள் உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் நகை கடன் தள்ளுபடி
நகை கடன் பெற்றவர்கள் உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் நகை கடன் தள்ளுபடி

By

Published : Sep 26, 2022, 7:03 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, "தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயிகளுக்கு, 3 ஆயிரத்து 969 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 14 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சம் பேர் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் வைத்து தற்போது வரை நகை கடனுக்கான உறுதிமொழி பத்திரம் கொடுக்காததால் அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. அவர்கள் உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் தள்ளுபடி செய்யப்படும்.

சென்னை அண்ணாநகர், திருமங்கலம், திருநகர் உள்ளிட்ட 10 நியாயவிலை கடைகள், கூட்டுறவு மருந்தகங்களில் கூகுள் பே மூலம் பணம் செலுத்தி பொருட்களை பெரும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழையால் காய்கறி விலை உயர்வு ஏற்பட்டால் பசுமை பண்ணை காய்கறி கடைகளில் குறைந்த விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details