சென்னை:நங்கநல்லூரில் ஐயப்பா நகர் பகுதியில் வசித்துவருபவர் ஸ்ரீதர் (61). இவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். நேற்று (ஜூலை 19) சென்னை அண்ணா நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குப் பிறந்தநாள் விழாவிற்காகக் குடும்பத்துடன் சென்றுள்ளார்.
இதை அறிந்த கொள்ளையர்கள் வீட்டில் புகுந்து நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். விழா முடித்துவிட்டு இன்று (ஜூலை 20) வீடு திரும்பிய அவர்கள் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 45 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி, 70 ஆயிரம் ரூபாய், ஒரு மடிக்கணினி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.