சென்னை:விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர், முருகன்(35). திமுக நிர்வாகியான இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரோஜா(30).
இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு தனது மகளை அழைக்கச் சென்று திரும்பினார். அப்போது, வீட்டின் கதவின் பூட்டை உடைத்துவிட்டு ஒரு நபர் உள்ளே சென்று நகைகளை திருடிக்கொண்டு இருந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சரோஜா உள்ளே சென்று பார்த்தபோது, அவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அங்கிருந்து அந்நபர் தப்பினார்.
இதையடுத்து, வீட்டில் இருந்த 3 சவரன் நகைகள், ரூ.10 ஆயிரம் பணத்தை அந்த நபர் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் கொள்ளைச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.