சென்னை: நகைக்கடன் தள்ளுபடி குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "5 சவரனுக்கு குறைவாக கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வைத்தவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறு அரசு எந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை" எனக் குற்றஞ்சாட்டினர்.
இதற்கு முதலமைச்சர் பதிலளித்து கூறும்போது, "நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதிகளில் கொடுத்தது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. தகுதியுடைவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். மேலும் திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்று கருதி நகைக்கடனை மக்கள் பெற்றனர். ஆனால் அதில் முறைகேடுகள் நடந்துள்ளன" எனக் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி, ஆட்சிக்கு வந்தால் செய்வார்கள் என்று நம்பி தானே மக்கள் நகைக்கடனை பெற்றனர் என்று கூறியபோது, மறுபடியும் குறுக்கிட்ட மு.க.ஸ்டாலின் முறைகேடுகளில் ஈடுபவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறுகிறீர்களா? முறைகேடுகள் நடந்ததை எதிர்கட்சி தலைவர் ஆதிரிக்கிறாரா? எனக் கேள்வி எழுப்பினார்.