சென்னை: மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) சேர்வதற்கான ஜே.இ.இ பிராதான தேர்வு இன்று (செப் 27) நடந்து வருகிறது.
இந்தியாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர ஜே.இ.இ தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். அந்த வகையில், ஜே.இ.இ. முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதில் தேர்வாகும் மாணவர்களே மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.
இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 10 லட்சத்து 66 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 10 லட்சத்து 23 ஆயிரம் மாணவர்கள் தேர்வினை எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் செப்டம்பர் 11ஆம் தேதி வெளியிடப்பட்டது.