அதிமுக,பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலில் களமிறங்கியுள்ளனர். இதேபோன்று திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அமமுக, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் தனித்தனியாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.
'தேர்தல் திருவிழா அழைப்பிதழ்' அசத்தும் அதிமுகவினர்! - அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன்
சென்னை: தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மருத்துவர் ஜெயவர்தனின் ஆதரவாளர்கள் நூதன முறையில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் திருவிழா அழைப்பிதழ்
கருணாநிதி - ஜெயலலிதா ஆகிய இருவரும் இல்லாத புதிய தேர்தல் களத்தை தமிழக மக்களும் அரசியல் தலைவர்களும் சந்திக்க இருக்கின்றனர். இதனால்,வெற்றி யாருக்கு என்பதை கணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மருத்துவர் ஜெயவர்தனின் ஆதரவாளர்கள் நூதன முறையில் திருமண பத்திரிகையை, தேர்தல் பத்திரிகை போன்று அச்சடித்து மக்களிடம் வழங்கி வருகிறார்கள். தற்போது இந்த தேர்தல் பத்திரிகை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.