தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 27, 2020, 4:39 PM IST

Updated : Dec 27, 2020, 5:03 PM IST

ETV Bharat / state

ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்ற ஜெயம் ரவியின் "பூமி" டிரைலர்

சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் 25வது படமான ”பூமி” திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

"பூமி" படத்தின் டிரைலருக்கு வரவேற்பு
"பூமி" படத்தின் டிரைலருக்கு வரவேற்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் இயக்குநர் லக்ஷ்மண் இயக்கத்தில் ரோமியோ ஜூலியட், போகன் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பூமி படத்தில் நடித்து வருகிறார். இது அவரின் நடிப்பில் வெளியாக இருக்கும் 25வது படமாகும். நிதி அகர்வால், சரண்யா பொன்வணணன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படமானது திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், வருகிற பொங்கலுக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் நேற்று (டிச.26) வெளியானது. தற்போது வரை யூடியூப்பில் ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க:யூ-டியூப்பில் ஐந்து கோடி பார்வையாளர்களைக் கடந்த மாஸ்டர் பட டீஸர்!

Last Updated : Dec 27, 2020, 5:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details