தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தில் 15 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெறும் - அமைச்சர் பாண்டியராஜன் - Jayalalithaa's memorial house will be opened on the jan 28th

சென்னை: ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தில் 15 ஆயிரம் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படும் என, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

சென்னை
சென்னை

By

Published : Jan 23, 2021, 8:08 AM IST

சென்னை கன்னிமாரா நூலகத்தில் நிரந்தர புத்தக கண்காட்சியை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், "மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதல் காதலே புத்தகம் தான். அதற்கு அவர் வீட்டிலிருந்த 15,000 புத்தகங்களே சாட்சி. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நிரந்தர புத்தக கண்காட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படவுள்ளது. அங்கு அவர் பயன்படுத்திய 15,000 புத்தகங்கள், பயன்படுத்திய பொருள்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. வரும் 28ஆம் தேதி முதல் ஜெயலலிதாவின் நினைவு இல்லம் திறக்கப்படுவுள்ளது எனத் தெரிவித்தார்,

ABOUT THE AUTHOR

...view details