சென்னைதலைமை செயலகத்தில் அலுவல் ஆய்வு குழு கூட்டத்திற்கு பின் பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போன்றவற்றின் விசாரணை அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார். இது குறித்து கூறுகையில், ‘இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் கூடிய அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் 19 ம் தேதி வரை இரண்டு நாட்கள் பேரவை கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுகளுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் பதிலுரை வாக்கெடுப்பு நடைபெறும்’ எனவும் தெரிவித்தார்.
மேலும், நாளை (அக்-18)நடைபெறும் பேரவை கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, தேவைப்பட்டால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் இந்தி எதிர்ப்பு அறிக்கை குறித்தும் விவாதிக்கபட உள்ளது எனவும் தெரிவித்தார்.