சென்னை: உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஷேசசாயி பிறப்பித்துள்ள தீர்ப்பின் விவரம்:
1. ஏற்கனவே 80 கோடி ரூபாய் செலவில் மெரினா கடற்கரையில் ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அதை கையகப்படுத்துவதில் எந்த பொது பயன்பாடு சம்பந்தப்பட்டுள்ளதாக கருத முடியாது.
2. எகிப்தில் பராஹாஸ் ஆட்சியாளர்கள் பிரமிடுகளை அமைத்தனர். முகலாய பேரரசர் ஷாஜகான் தாஜ்மஹால் எழுப்பினார். ஆனால் தற்போது இந்தியா எகிப்து ஆட்சியாளர்களிடமோ, முகலாய பேரரசர்கள் வசமோ இல்லை. இந்தியா, மக்களுக்கு சொந்தமானது.
3. ஒரு சொத்தை கையகப்படுத்தும் முன் சம்பந்தப்பட்டவர்களுக்கு,60 நாள்களுக்கு முன் தெரியப்படுத்த வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை. வேதா நிலையத்திற்கு யாரும் உரிமைதார்ர்களே இல்லை என்ற ரீதியில் அரசு தானே அதிகாரத்தை கையில் எடுத்துள்ளது.
4. தங்கள் கட்சி சார்ந்த தலைவரை கொளரவிப்பதை புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால் இந்த வழக்கில் அரசியல் தலைமையையும், சொத்தின் உரிமையையும் பிரித்துபார்க்க தவறிவிட்டார்கள். உரிய விதிகளை பின்பற்றாமல், கையகப்படுத்தப்பட்டுள்ளது.