தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி கோரிய மனு- விளக்கமளிக்க உத்தரவு

விழுப்புரத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்க கோரி முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தாக்கல் செய்த மனு குறித்து ஆகஸ்ட் 4ஆம் தேதி விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

jayalalitha-university-neglected-notice-to-state-mhc
ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி கோரிய மனு- ஆகஸ்ட் 4ல் விளக்கமளிக்க உத்தரவு

By

Published : Aug 3, 2021, 5:59 AM IST

சென்னை:விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்கள் நலனுக்காக, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்து, விழுப்புரத்தை தலையிடமாக கொண்டு டாக்டர். ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம், முந்தைய அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது.

அந்தப் பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்க கோரியும், பதிவாளரை நியமிக்க கோரியும், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மனுவின் கோரிக்கை

அந்த மனுவில், ”டாக்டர். ஜெயலலிதா பல்கலைகழகத்திற்கான துணை வேந்தர் நியமிக்கப்பட்டு, பல்கலைக்கழக கட்டுமானத்திற்காக விழுப்புரம் மாவட்டம், செம்மேடு கிராமத்தில், 70 ஏக்கர் நிலம் கடந்த அரசால் ஒதுக்கப்பட்டபோதும், தற்போதைய அரசின் புறக்கணிப்பால் பல்கலைக்கழகம் இன்னும் பழைய தாலுகா அலுவலகத்தில் செயல்படுவதாகவும், இன்னும் பல்கலைக்கழகத்திற்கு பதிவாளரும், போதுமான பணியாளர்களும் நியமிக்கப்படாததால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதன் முதுகலை மையத்தில், முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது சட்டத்தை மீறிய செயல் எனவும், அந்த அறிவுப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இருதரப்பு வாதம்

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஜெயலலிதா பல்கலைக்கழக வரம்புக்குள் வரும் பகுதிகளில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் படிப்புகளை வழங்க முடியாது எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கிய பின்பு, துணைவேந்தர் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும், கட்டிடங்களும் கட்டப்படவில்லை, அடிப்படை வசதிகளும் இல்லை என்பதால் மாணவர்களின் நலன் கருதி திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக அரசின் கருத்துக்களை அறிந்து தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:சட்டப்படிப்பில் சேர்வதற்கு 4ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

ABOUT THE AUTHOR

...view details