சென்னை: கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் சாலையில் உள்ள முதியோர் கருணை இல்லத்தில் சசிகலா கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, "நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அனைவரையும் கன்டிப்பாக ஒன்றிணைப்பேன். பெங்களூரில் இருந்து எப்போது வெளியில் வந்தேனோ, அப்போதிலிருந்து இதைத்தான் கூறி வருகிறேன்.
இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் ஒருவருக்கொருவர் விமர்சனங்களை முன் வைத்தாலும், நான் ஒரு தாயின் இடத்தில் இருந்து யாருக்கும் சார்பு இல்லாமல் இருந்து வருகிறேன். நான் இருக்கும் வரை தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கை எப்படி இருந்தது, ஆனால் அவர்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. ஆறுமுகசாமி ஆணையத்திலிருந்து நான் பெங்களூரில் இருந்தபோது எனக்கு வந்த நோட்டீசில் மூன்று தேர்வுகள் இருந்தது. அது, நேரில் வரவேண்டும் அல்லது வழக்கறிஞர் மூலமாக தெரிவிக்க வேண்டும் அல்லது எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.