தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடநாடு எஸ்டேட் விவகாரம்: பிணை குறித்து பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! - சென்னை மாவட்ட செய்திகள்

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் பிணை மனுக்கள் குறித்து காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Jul 7, 2020, 4:29 PM IST

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ல் காவலாளியை கொலை செய்து, கொள்ளையடித்ததாக, சயான், மனோஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்த கோத்தகிரி போலீசார், அவர்களைக் கைது செய்தனர்.

இவர்களை பிணையில் விடுதலை செய்து, கோத்தகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த பிணையை ரத்து செய்யக் கோரி காவல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்ட நீலகிரி அமர்வு நீதிமன்றம், இருவரின் பிணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள இருவரும், தங்களுக்கு பிணை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், "இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் எட்டு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதால், தங்களுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது

இந்த மனுக்கள் இன்று நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அய்யப்ப ராஜ், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார்.

தொடர்ந்து, காவல் துறையை வரும் ஜூலை 16ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதி, அன்றைய தினமே அவர்களின் பிணை மனுக்கள் மீதான வழக்கின் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details