தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

என் தந்தை சுதந்திரப் போராட்ட வீரர்: ஜெயக்குமார் பெருமிதம்! - தந்தையர் தின வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தந்தையர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

jayakumar

By

Published : Jun 16, 2019, 7:00 PM IST

குழந்தைகளுக்கு எப்போதும் ஹீரோவாக இருப்பவர் தந்தை எனலாம். அத்தகைய தந்தையை போற்றும் வகையில் இன்று நாடு முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தந்தையர் தினத்தை முன்னிட்டு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தன் தந்தை சுதந்திரப் போராட்டம் முதல் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் வரை பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டவர் என பெருமிதம் கொண்டுள்ளார்.

ஜெயக்குமார் தந்தையர் தின வாழ்த்து

மேலும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து முக்கிய பொறுப்பில் இருந்த தன் தந்தை இறந்தபோது, ஜெயலலிதா ராயபுரம் வீட்டிற்கு வந்து அவருக்கு மரியாதை செலுத்தினார் என ஜெயக்குமார் நினைவுகூர்ந்தார்.

ABOUT THE AUTHOR

...view details