தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுக விஞ்ஞானப்பூர்வ ஊழலில் கெட்டிக்காரர்கள்' - ஜெயக்குமார் கிண்டல்

திமுகவினர் விஞ்ஞானப்பூர்வ ஊழலில் கெட்டிக்காரர்கள், தேர்தலையும் அதுபோல எதிர்கொள்ள நினைக்கின்றனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் காணொலி
அமைச்சர் ஜெயக்குமார் காணொலி

By

Published : Feb 6, 2022, 8:52 PM IST

சென்னை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'லதா மங்கேஷ்கர் மறைவு இந்தியாவிற்கு மிகப்பெரும் இழப்பு. இளம் தலைமுறையினர் லதா மங்கேஷ்கர் பாடலை யூ-ட்யூப்பில் கேட்க வேண்டும். அதிமுக சார்பில் லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம். நானும் அவரது ரசிகன்.

நீட் தேர்வுக்கு காரணம் திமுகவே...

திமுகவினர் விஞ்ஞானப்பூர்வ ஊழலில் கெட்டிக்காரர்கள், தேர்தலையும் அதுபோல எதிர்கொள்ள நினைக்கின்றனர். நாகையில் அதிமுக வேட்பாளர் ஒருவர் இறந்துவிட்டதாகப் பதிவு செய்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் தமிழ்நாடு முழுவதும் குளறுபடி நடந்திருக்கிறது. அதிமுக வேட்பாளர்கள் தடையில்லா சான்றிதழ் பெறுவது சிரமமாக உள்ளது.

அமைச்சர் ஜெயக்குமார் காணொலி

திமுகவினருக்கு காவல்துறையினர் முன்கூட்டியே சான்றிதழ் வழங்கியுள்ளனர். தேர்தல் அலுவலர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது சட்டப்படியான வழக்கைத் தொடர முடியும். சட்டப்படி தேர்தல் நடத்த அலுவலர்கள் உதவ வேண்டும். வரும் காலத்தில் பாஜகவுடனான கூட்டணி குறித்து, அதிமுக தலைமை முடிவு செய்யும்.

சட்டையைக் கிழித்துக்கொண்டு வந்து ஆளுநரிடம் முறையிட்டது யார்?

நீட் தேர்வுக்கு காரணம் திமுகதான். சட்டப்பேரவையிலிருந்து சட்டையை கிழித்துக் கொண்டு வெளியில் வந்து, ஆட்சியை கலைக்க முறையிட திமுகவிற்கு ஆளுநர் தேவைப்பட்டார்.

தற்போது ஆளுநர் தேவையில்லை என கூறுகின்றனர். ஸ்டாலின் தன்னை தலைவராக ஒருபோதும் கருதியதில்லை என்று மா.சுப்பிரமணியன் கூறியதால், ஸ்டாலின் அவரை திட்டியிருப்பார். தமிழ்நாட்டில் இருப்பவர்களே ஸ்டாலினை தலைவராக ஏற்கவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது' என்றார்.

இதையும் படிங்க:லதா மங்கேஷ்கருக்கு இரங்கல் தெரிவித்த இசைஞானி

ABOUT THE AUTHOR

...view details