தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்த திமுகவிற்கு அரசியல் கொள்கை கிடையாது. அவர்களின் ஒரே லட்சியம் பணம், பதவி தான். ஒரே நேரத்தில் மூன்று படகுகளில் சவாரி செய்யும் சாமர்த்தியம் ஸ்டாலினுக்கும் திமுகவிற்கும் உண்டு. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துகொண்டு, சந்திரசேகர் ராவுடன் பேசிவிட்டு, பாஜகவிற்கு திமுகவினர் தூதுவிடுகின்றனர்.
‘பாஜகவிடம் ஐந்து அமைச்சர் பதவிகளை பெற திமுக முயற்சி’ - ஜெயக்குமார் - DMk
சென்னை: மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி வரும் என்பதால் அவர்களிடம் ஐந்து அமைச்சர் பதவிகளை பெற திமுக முயற்சிப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
jayakumar
மத்தியில் பாஜக ஆட்சி வரும் என்பதை அறிந்து கொண்டு ஐந்து அமைச்சர் பதவி பெற திமுக முயற்சித்து வருகிறது. இதனை பாஜக தலைவரும் ஊர்ஜிதப் படுத்தியுள்ளனர். சந்தர்ப்பவாத உச்சகட்டமான திமுக உள்ளது" என்றார்.