சென்னை ராயபுரத்தில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “முதலமைச்சர் வேட்பாளர் குறித்து தற்போது கருத்து கூறுவது ஆரோக்கியமாக இருக்காது. அது குறித்து உரிய நேரத்தில் கட்சி மேலிடம் முடிவெடுக்கும். இது தொடர்பாக, அதிமுகவினர் யாரும் கருத்து தெரிவிக்காமல் இருப்பது நல்லது. முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் கூறும் கருத்து கட்சியின் கருத்து இல்லை.