தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழர்களின் நெஞ்சங்களில் ஈட்டியை பாய்ச்சியவர் கருணாநிதி- ஜெயக்குமார் தாக்கு - kalinger

சென்னை: தமிழ் புத்தாண்டை தை ஒன்றாம் தேதிக்கு மாற்றி திமுக தலைவர் கருணாநிதி, தமிழ் மக்களின் நெஞ்சங்களில் ஈட்டியை பாய்சினார் என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்

By

Published : Apr 14, 2019, 1:26 PM IST

சென்னை துறைமுகத்தில், மறைந்த சட்டமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 128ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலம்காலமாக சித்திரை ஒன்றாம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாட வேண்டும் என்று கூறினார். ஆனால் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி தமிழ் புத்தாண்டை தை ஒன்றாம் தேதி மாற்றி அமைத்து தமிழ் மக்களின் நெஞ்சங்களில் ஈட்டியை பாய்ச்சினார்.

டாக்டர் அண்ணல் அம்பேத்கரின்ன் பிறந்த நாள் விழா தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் மாவட்ட வாரியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அம்பேத்கரின் பிறந்த தினத்தை நினைவுகூறும் வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்பேத்கருக்கு கிரீன்வேஸ் சாலையில் மணிமண்டபம் கட்டினார்" என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்

ABOUT THE AUTHOR

...view details