தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தாதது ஏன்? - ஜெயக்குமார் கேள்வி

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசை எதிர்த்துப் போராடும் தொழிற்சங்கங்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றாத மாநில (திமுக) அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தாதது ஏன் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

jayakumar ask Why did trade unions fighting against central government not condemn DMK government for not fulfilling its promise மத்திய அரசை எதிர்த்து போராடும் தொழிற்சங்கங்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்தாதது ஏன் - ஜெயக்குமார் கேள்வி
jayakumar ask Why did trade unions fighting against central government not condemn DMK government for not fulfilling its promise மத்திய அரசை எதிர்த்து போராடும் தொழிற்சங்கங்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்தாதது ஏன் - ஜெயக்குமார் கேள்வி

By

Published : Mar 28, 2022, 3:24 PM IST

சென்னைதுரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார் மற்றும் மகள் ஜெயபிரியா ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதனையடுத்து, சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜாமின் நிபந்தனைப்படி கையெழுத்திட ஜெயக்குமார் ஆஜரானார்.

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஏற்கனவே கடந்த 2 வாரங்களாக திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆஜராகி கையெழுத்திட்டதாகவும், அதேபோல ஒவ்வொரு திங்கள் கிழமையும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைப்படி இன்று ஆஜராகி கையெழுத்திட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், சனி, ஞாயிறு உட்பட மீதமுள்ள நாட்களில் ராயபுரம் N1 காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து இடவுள்ளதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு குறைத்தும் அவர்களுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ள தொழிற்சங்கங்கள், திமுக தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த பழைய பென்ஷன் திட்டம், ஊதிய உயர்வு, 100 ரூபாய் கேஸ் மானியம், கல்விக் கடன் ரத்து உள்ளிட்டவை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ள நிலையிலும் அவர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தாமல் மௌனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசை எதிர்த்து போராடும் தொழிற்சங்கங்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்தாதது ஏன் - ஜெயக்குமார் கேள்வி

மாநில அரசு முழுக்க முழுக்க தொழிலாளர் விரோதப் போக்கை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எவ்வளவோ விமானங்கள் துபாய்க்குச் செல்ல இருந்தும், விமானம் இல்லை என்பதை காரணம் காட்டி குடும்பத்தினருடன் தனி விமானத்தில் துபாய் சென்ற ஏன் என கேள்வி எழுப்பிய அவர், இந்த பயணம் அரசுமுறைப் பயணமா? அரசர் முறை பயணமா? முதலீட்டை ஈர்க்கவா? முதலீடு செய்யவா? எனவும் கேள்வி எழுப்பினார்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது திமுக ஒரு குடும்பக் கட்சி என்பதற்கு மக்களே சாட்சி எனவும் அவர் குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வு தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என்ற அதிமுக-வின் நிலைப்பாட்டை பின்பற்றி நாங்கள் எடுத்த அதேபோன்ற சட்டப் போராட்டத்தைத் தான் திமுக அரசும் முன்னெடுத்துள்ளதாகவும், விரைவில் மத்திய பாஜக அரசுக்கு அடிமை வேலை செய்யக்கூட திமுக தயாராகிவிடும் எனவும் ஜெயக்குமார் கூறினார்.

இதையும் படிங்க:ஆஸ்கர் விருதுகள் 2022: சிறந்த திரைப்படங்களின் பட்டியல்

For All Latest Updates

TAGGED:

Jayakumar

ABOUT THE AUTHOR

...view details