தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளர் நியமனம் - திருச்சி எஸ்பியாக ஜெயச்சந்திரன் நியமனம்

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து புதிய காவல் கண்காணிப்பாளராக ஜெயச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி எஸ்பியாக ஜெயச்சந்திரன்
திருச்சி எஸ்பியாக ஜெயச்சந்திரன்

By

Published : Jul 10, 2020, 11:51 PM IST

தமிழ்நாடு முழுவதும் 51 ஐபிஎஸ் அலுவலர்களை தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்து அரசாணை வெளியிட்டது.

அதன்படி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஜியாவுல் ஹக் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஜெயச்சந்திரன் திருச்சிக்கு காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

அதேபோல திருச்சி மாநகர காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்த நிஷா சென்னை அம்பத்தூர் துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டார்.

மேலும், திருச்சி மாநகர காவல் துணை ஆணையராக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டார்.

இதையும் படிங்க:கேரள தங்கம் கடத்தல் வழக்கு : தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details